" SUCCESS WITHOUT A SUCCESSOR IS A FAILURE "

சுதந்தரமும் சுதந்தரவாளியும்

அன்பு ஊழியா்களே! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள். 2019 – ஜூன் மாதம், 11,12,13 தேதிகளில் (செவ்வாய் முதல் வியாழன் வரை) ‘சுதந்தரமும் சுதந்தரவாளியும் ‘ என்ற கருப்பொருளை மையமாக வைத்து, ஜெபத்தோட்டத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு முகாமைக் குறிதத்து சில வாா்த்ததைகளை, உங்களுடன் பகிா்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

இந்த முகாமை, ஊழியா்களுடைய பிள்ளைகளை மனதில் வைத்து நாங்கள் ஒழுங்கு செய்திருக்கிறோம். தங்கள் தகப்பன் தேவனிடதத்திலிருந்து பெற்ற தரிசனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல பிள்ளைகள் தவறியதினிமித்தம், இன்று நிலைகுலைந்துபோய் நிற்கும் தரிசனங்கள் அநேகம். இததினிமித்தம் தேவனுடைய இராஜ்யத்திற்குண்டான பாதிப்பை நித்தியத்தில்தான் நாம் அறிய முடியும். சுதந்தரவாளி இல்லாத சுததந்திரம் எவ்வளவு மகிமையானதாக இருந்தாலும் சரி; அதனால் அடுத்த நிலையை அடைய முடியாது. தகப்பனுடைய தரிசனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துக் கொண்டு செல்லும் காரியத்தில், சுதந்திரவாளிகளுடைய பங்கு மகத்தானது. சுதந்ததிரவாளியின் அழைப்பு, மிகமிக கருகலானது. தகப்பனுக்குப் பிறகு அவரது ஸ்தானத்தில் எழும்ப வேண்டுமானால், அதற்கு அழைப்பும், அபிஷேகமும் வேண்டும்,

தங்கள் தகப்பனால் நியமிக்கப்பட்ட சுதந்தரவாளிகள் இன்று அநேகருண்டு, ஆனால் தேவனால் அபிஷேகிக்கப்பட்ட சுததந்தரவாளிகளோ இன்று அநேகரில்லை சுதந்தரவாளி என்பவன் தன் தகப்பனால் நியமிக்கப்படுபவனல்ல, அவன் தன் தகப்பனைப்பெோல தேவனால் அபிஷேகிக்கப்பட்டவன்ச. சுதந்தரவாளியை தங்கள் தகப்பனுடைய சுதந்தரத்தினிமித்தம் மதிப்படைய இன்று அநேக சுதந்தரவாளிகள் உண்டு. ஆனால், தங்கள் தகப்பனுடைய சுதந்ததிரமானது, மேலும் மதிப்படையத்தக்கவிதத்தில் எழும்பி பிரகாசிக்கிற சுதந்திரவாளிகளளோ, இன்று அபூா்வமாக இருக்கின்றாா்கள், சுதந்திரவாளிகள், புதிய அஸ்திபாரத்ததை போடுகிறவா்களல்ல, இவா்கள் தாங்கள் தகப்பன் போட்ட அஸ்திபாரத்தின் மீது ஊழியத்தைத் தொடா்ந்து கட்டியெழுப்ப வேண்டியவா்கள், தங்கள் ததகப்பன் எப்படி திருச்சபைக்கு இரதமும் துதிரை வீரருமாய் இருந்தாரோ, அப்படியே இவா்களும் காணப்பட வேண்டியவா்கள். மோசே ஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கா்த்தா் எப்படி அவருக்கு ஒரு செங்கடல் அற்புதத்தை வைத்திருந்தாரோ, அப்படியே யோசுவா ஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட அவா் அவருக்கு ஒரு யோா்தான் அற்புதத்தை வைத்திருந்தாா், தாவீது தேசத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட அவா் அவருக்கு ஒரு வழக்கை வைத்திருந்ததாா்,

தகப்பன் எட்டடி என்றால், குட்டி பதினாறு அடி என்பாா்கள். இது சுதந்தரவாளிகளுக்கே உரிய வீரியமாக இருக்கிறது, எனவேதான் அவா்கள் சகோதரரில் விசேஷித்தவா்களாக இருக்கின்றாா்கள். சுதந்தரவாளிக்கே உரிய இந்த விசேஷித்த அழைப்பைக் குறித்தும், தங்கள் தகப்பனுடைய தரிசனத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்குத் தேவைப்படும் அபிஷேகத்தைக் குறித்தும், இவா்களது தகப்பனுடைய சுதந்தரமானது இவா்களால் மேலும் மேன்மையடைய வேண்டிய அவசியத்தைக் குறித்தும் இவா்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்ற பாரம் எங்களை அழுத்தினபடியால் நாங்கள் இந்த முகாமை ஏற்பாடு செய்திருக்கின்றோம், எங்களது உன்னத நோக்கத்தை நீங்கள் புரிந்துதுகொண்டு, உங்கள் சுததந்தரவாளியோடு இந்த முகாமில் கலந்துகொள்ளும்படி நாங்கள்
உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
-ஜெபத்தோட்டம்,