Back

தாயின் மடியில் குழந்தைபோல – Story behind the song

(ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள். பாகம் எண்:33, பாடல் எண்:364

ஊழியம் என்று வரும்பொழுது அதிலே தேவைகளுக்குப் பஞ்சமேயிருக் காது. எங்களுக்குத் தேவைகளே இல்லை என்று சொல்லக்கூடிய ஊழிய மானது, இன்று நம்மிடையே யாரிடம் உண்டு? நமது தேவைகள் சந்திக்கப் பட நாம் நம்முடைய தேவனைச் சார்ந்து கொண்டு காத்திருக்கும்பொழுது அவர் நமக்குச் செய்யும் அற்புதங்களை நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இப்படிப்பட்டதொரு அனுபவத்தையே இப்பாடல் வழியாக உணர. தேவ ஆவியானவர் தந்தை அவர்களுக்குக் கிருபை செய்திருக் கின்றார். அந்த அனுபவத்தைத் தந்தை அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ளத் துவங்கினார்கள்.

கடந்த வருடம் 2012-ல் தீடீரென்று என்னை ஒருவிதமான சோர்வும் கவலையும் எதிர்காலத்தைக் குறித்த பயமும் கவ்விக் கொண்டன. அதினிமித்தம் என் மனது கலக்கமடைய ஆரம்பித்தது. நான் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தபொழுது, பவுல் கொரிந்தியருக்கு எழுதியுள்ள: நீங்கள் எல்லாவற்றிலும் எப் பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியை களிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார் (2 கொரி.9:8) என்ற வசனமானது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

நான் கிறிஸ்துவிற்குள் உணர்வடைய ஆரம்பித்தேன். அப்பொழுது தான் இந்தப் பாடலானது எனக்குள் பிறக்க ஆவியானவர் அநுக்கிரகம் செய்தார். எனக்குள்ளிருந்து தெய்வீக சந்தோஷமும் சமாதானமும் நிரம்பிவழிய ஆரம்பித்தன. அதுமட்டுமல்லாமல், தேவனுடைய பேரமைதியானது என் மனதை ஆட்கொள்ளவும் ஆரம்பித்தது.

புரிந்துகொள்ள நமக்குச் சற்று கடினமாகத்தோன்றும் மேலே சொல்லப்பட்ட வசனமானது, கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் நாம் புரிந்துகொள்வதற்கு மிகவும் எளிதான விதத்தில்: கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்பவல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார். அனைத்து நற்செயல்களையும் செய் வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார் (2 கொரி.9:8) என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், இந்த வசனத்தில் வரும், ‘அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவை யானதெல்லாம் மிகுதியாகவே தருவார்” என்ற வார்த்தையானது. என் மனதை வெகுவாக உயிர்ப்பித்தது. இந்தப் பாடலில், என்னை உயிர்ப்பித்த இந்த வரிகளை நான் திரும்பத்திரும்ப அறிக்கை செய்து பாட ஆவியானவர் எனக்குக் கிருபை செய்தார்.

இப்பாடல் எனக்குக் கிடைத்த சமயத்தில், ஊழியத்திற்கு மிகவும் அவசியமாகத் தேவைப்பட்ட சில பொருட்களை நான் வாங்க வேண்டியிருந்தது. கையில் இருக்கிற பணத்தை வைத்து அவை களை உடனடியாக வாங்கிவிடலாம் என்ற நிலை எனக்கு இருந் தாலும், அப்படிச் செய்ய எனக்கு மனம் வரவில்லை. “ஆண்டவரு டைய பாதத்தில் காத்திருப்போம். அவர்தான் நற்செயல்கள் செய்யத் தேவையானதெல்லாம் மிகுதியாய்த் தந்திடுவேன் என்று சொல்லி யிருக்கின்றாரே! எனவே, அவர் இந்தத் தேவையை எப்படியும் சந்திப்பார்’ என்று சொல்லி, எனக்கு வெளிப்படுத்தப்பட்ட வசனத்தை என் முழுஇருதயத்தோடும் விசுவாசித்து, அதைப் பாடி அறிக்கை செய்யவும் ஆரம்பித்தேன். வசனத்தை நாம் விசுவாசத்தோடு அறிக்கையிடும்பொழுது. நமது ஜெபம்தான் எத்தனை வல்லமை யுள்ளதாக உருமாறிவிடுகிறது!

சிலநாட்கள் சென்றன. அப்பொழுது, நான் சற்றும் எதிர்பார்த்திராததொரு விதத்தில் எதிர்பார்த்திராததொரு நேரத்தில் நான் சற்றும் எதிர்பார்த்திராததொரு நபர் வழியாகத் தேவனாகிய கர்த்தர் ஒரு பெருந்தொகையை என்னிடம் காணிக்கையாகக் கொண்டுவந்து கொடுக்க அநுக்கிரகம் செய்தார். நான் ஊழியத்திற்காக மிக அவசியமாக வாங்கியே ஆகவேண்டியிருந்த அந்தப் பொருட்களை வாங்குவதற்கு, எனக்குத் தேவைப்பட்ட பணத்தைவிட அதிகமான பணம் காணிக்கையாக என்னிடம் கொடுக்கப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது!

“நற்செயல்கள் செய்யத் தேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தந்திடுவார்” – என்ற வார்த்தையை நான் என் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, அதைப் பாடி அறிக்கை யிட்டது எனக்கு வீண்போகவில்லை. அந்த வார்த்தையானது. என் சார்பில் நின்று கிரியை செய்து எனக்கு ஒரு அற்புதத்தைச் செய்தது.

ஊழியர்கள் தங்களது ஊழியத்தின் தேவைகளைக் குறித்த கலக்கமும் கவலையும் தங்களுக்குள் எழும்பொழுதெல்லாம். கர்த்தரைச் சார்ந்துகொள்ளவே முன்வரவேண்டும். அப்பொழுது,

தேவனுக்காக நற்செயல்களைச் செய்யத் தேவையான அனைத்தையும் தேவாதிதேவன் அவர்களுக்கு மிகுதியாகத் தர போதுமானவராக இருப்பார். தன்மீது முழு விசுவாசம் வைத்துத் தன் பாதத்தில் காத்திருக்கின்ற இப்படிப்பட்ட ஊழியர்களை, பிறரிடம் சென்று கையேந்த தேவனாகிய கர்த்தர் ஒருபோதும் விடமாட்டார். இப்பாடலில் நான் பாடியுள்ளதைப்போலவே, கர்த்தர் இவர்களை மேன்மையடையச் செய்வாரேயொழிய, இவர்கள் கீழ்மையடைய மட்டும் ஒருபோதும் விடவேமாட்டார்.

எனக்கன்பானவர்களே! நமக்கு ஒரு தரிசனம் (Vision) அருளப்பட்டு இருந்தால் அந்தத் தரிசனத்தை நிறைவேற்றி முடிக்கத் தேவையான அனைத்தையும் (Provision) நம் ஆண்டவராக இருக்கின்ற இயேசு கிறிஸ்துவானவர் நமக்கு மிகுதியாய்த் தர வல்லவராக இருக்கின்றார். நாம் நமது தேவையைச் சார்ந்து நின்று ஊழியம் செய்யாமல். நம் தேவனைச் சார்ந்து நின்று ஊழியம் செய்தால், நற்செயல்கள் செய்யத் தேவையான அனைத்தையும் அவர் நமக்கு மிகுதியாகவே தந்திடுவார்.

லோத்து தன் தேவையைச் சார்ந்து நிற்பதைத் தெரிந்துகொண்டபொழுது. ஆபிரகாம் தன் தேவனைச் சார்ந்து நிற்பதைத் தெரிந்துகொண்டார். லோத்து தன் தேவையைச் சார்ந்து நின்று தன் கண்கள் கண்ட நீர்வளத்தை யும் நிலவளத்தையும் நம்பி, தனது வழியில் நடப்பதைத் தெரிந்துகொண்ட பொழுது, ஆபிரகாம் தன் தேவனைச் சார்ந்து நின்று, அவர் தனக்கு அருளிச் செய்த தரிசனத்தை விசுவாசித்து, கர்த்தர் காண்பித்த வழியில் நடப்பதைத் தெரிந்துகொண்டார்.

ஆபிராம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபொழுதோ, கர்த்தர் அவருக்கு அருள விரும்பின தரிசனமானது அவரது கண்களுக்கு முன்பாக விரிந்தது. லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு. கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து. நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக் கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, உன் சந்ததியைப் பூமியின் துளைப்போலப் பெருகப்பண்ணுவேன்: ஒருவன் பூமியின் துாளை எண்ணக் கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார். அப்பொழுது ஆபிராம் கூடாரத் தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலி பீடத்தைக் கட்டினான் (ஆதி.13:14-18).

தேவை ஒருபோதும் தவறாகாது; மாறாக, நமது தேவையைச் சார்ந்து நிற்பதுதான் தவறாகும். அதேநேரத்தில் நம் தேவைகளுக்காக நம் தேவனைச் சார்ந்து நிற்பதோ. மிகச்சரியானதொரு செயலாகும். நம் தேவைகளோடு தொடர்புடைய நம் கண்கள் கண்ட வளங்களைப் பின்தொடர்வதற்கும் நம் மனக்கண்களுக்குக் காண்பிக்கப்பட்ட தேவ தரிசனத்தைப் பின்தொடர்வதற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கின்றது. நம் கண்கள் காண்பதைப் “பார்வை” என்று சொன்னால். நம் மனக்கண்களுக்குக் காண்பிக்கப்படுவதைத் “தரிசனம்” என்று சொல்லலாம். தரிசனத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் ஒருநாளும் குறைவு படுவதில்லை. அவர்களுக்கு அருளப்பட்ட அந்தத் தேவதரிசனத்தை அல்லது நற்செயலை. அவர்கள் செய்துமுடிக்கத் தேவையான அனைத்து வளங்களையும் கர்த்தர் அவர்களுக்கு மிகுதியாகவே தர வல்லவராக இருக்கின்றார்.

லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபொழுது, அவரது தேவை சந்திக்கப்படுவதற்கான நீர்வளமும் நிலவளமும் அவரது கண்களுக்குத் தெரிந்தன. அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தின தாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்குமுன்னே, சோவாருக்குப்போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு. கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான் (ஆதி.13:10-11).

We use cookies to give you the best experience. Cookie Policy