Back

10 . Yesu Nammodu | இயேசு நம்மோடு

E – Maj | 2 / 4 / T – 125 

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் 

இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்

அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே 

அல்லேலூயா அகமகிழ்வோமே 

1 . காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும் 

கர்த்தர் ஒளியாவார் 

ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்

உலகின் ஒளி நாமே

2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே 

தேவனின் வார்த்தை உண்டு 

அவரின் தூய தழும்புகளால் 

குணம் அடைகின்றோம் நாம்

3 . மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும் 

மனமோ தளர்வதில்லை 

கோதுமை மணிபோல் மடிந்திடுவோம் 

சிலுவையைச் சுமந்திடுவோம்

We use cookies to give you the best experience. Cookie Policy