Back

100 . Yeshu kirusthu | இயேசு கிறிஸ்து

F . min / 414 | T – 100 

இயேசு கிறிஸ்து என் ஜீவன் 

சாவது ஆதாயமே   

வாழ்வது நானல்ல – இயேசு 

என்னில் வாழ்கின்றார்

1 . இயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன் 

அவருக்குள் நான் வேர் கொண்டேன் 

அவர் மேல் எழும்பும் கட்டடம் நான் 

அசைவதில்லை தளர்வதும் இல்லை  

2 . என்ன வந்தாலும் கலங்கிடாமல் 

இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன் 

அறிவைக் கடந்த தெய்வீக அமைதி

அடிமை வாழ்வின் கேடயமே ,

 3 . எனது ஜீவன் கிறிஸ்துவுடனே 

தேவனுக்குள்ளே மறைந்தது – – 

ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில் 

மகிமையில் நான் வெளிப்படுவேனே

 4 . கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே 

பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன் 

அவரை அறியும் அறிவிலே வளர்வேன் 

அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

We use cookies to give you the best experience. Cookie Policy