Back

102 . Unthan aavi | உந்தன் ஆவி

F – Maj / 4 / 4 / T – 110 

உந்தன் ஆவி எந்தன் 

உள்ளம் தங்க வேண்டும்

எந்த நாளும் உந்தன் 

நாமம் பாட வேண்டும் . 

1 . உள்ளம் எல்லாம் அன்பினாலே 

பொங்க வேண்டும்

கள்ளம் நீங்கி காலமெல்லாம் 

வாழ வேண்டும்

 2 . பாவமான சுபாவம் எல்லாம் 

நீங்க வேண்டும் 

தேவ ஆவி தேற்றி என்றும் 

நடத்த வேண்டும்

 3 . ஜீவ தண்ணீ ர் நதியாகப் 

பாய வேண்டும்

சிலுவை நிழலில் தேசமெல்லாம் 

வாழ வேண்டும் 

4 . வரங்கள் கனிகள் எல்லா நாளும் 

பெருக வேண்டும்

வாழ்நாளெல்லாம் பணிசெய்து 

மடிய வேண்டும் ‘ 

5 . ஏதேன் தோட்ட உறவு என்றும் 

தொடர வேண்டும்

இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு 

மகிழ வேண்டும்

We use cookies to give you the best experience. Cookie Policy