Back

107 . Boomiyin kudikalae | பூமியின் குடிகளே  

F – Maj / 6 / 8 / T – 115 

பூமியின் குடிகளே வாருங்கள்

கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் 

1 . மகிழ்வுடனே கர்த்தருக்கு

ஆராதனை செய்யுங்கள் 

ஆனந்த சத்தத்தோடே 

திருமுன் வாருங்கள் 

2 . கர்த்தரே நம் தேவனென்று

என்றும் அறிந்திடுங்கள் 

அவரே நம்மை உண்டாக்கினார் 

அவரின் ஆடுகள் நாம் 

3 . துதியோடும் புகழ்ச்சியோடும்

வாசலில் நுழையுங்கள் 

அவர் நாமம் துதித்திடுங்கள் 

ஸ்தோத்திர பலியிடுங்கள் 

4 . நம் கர்த்தரோ நல்லவரே

கிருபை உள்ளவரே 

அவர் வசனம் தலைமுறைக்கும் 

தலைமுறைக்கும் உள்ளது .

We use cookies to give you the best experience. Cookie Policy