Back

109 . Thratchai chediyae | திராட்சைச் செடியே

E – min / 6 / 8 | T – 115 

திராட்சைச் செடியே இயேசு ராஜா 

உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் 

உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் 

திராட்சைச் செடியே இயேசு ராஜா

1 . பசும்புல் மேய்ச்சலிலே 

நடத்திச் செல்பவரே

பரிசுத்தமானவரே – ஐயா 

உள்ளமே மகிழுதையா 

உம்மோடு இருப்பதனால் 

கள்ளம் நீங்குதையா – எனக்கு 

2 . குயவன் கையில் உள்ள களிமண் நாங்கள் 

ஏந்தி வனைந்திடுமே ஐயா

சித்தம் போல் உருவாக்கும் 

சுத்தமாய் உருமாற்றும் 

நித்தம் உம் கரத்தில் – நாங்கள் 

3 . வார்த்தையில் நிலைத்திருந்து தினமும் 

கனி கொடுக்கும்

சீடர்கள் நாங்கள் ஐயா

வேதத்தை ஏந்துகின்றோம் 

வாசித்து மகிழுகின்றோம் 

தியானம் செய்கின்றோம் – நாங்கள்

We use cookies to give you the best experience. Cookie Policy