110 . உன்னையே வெறுத்து
E – Maj / 4 / 4 / T – 90
உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்
1 . சிலுவை சுமப்பதனால்
சிந்தையே மாறி விடும்
நீடிய பொறுமை வரும்
நிரந்தர அமைதி வரும்
2 . பெயர் புகழ் எல்லாமே
இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே
நமது மறையட்டுமே
3 . நாளைய தினம் குறித்து
கலங்காதே மகனே ( மகளே )
இதுவரை காத்த தெய்வம்
இனியும் நடத்திடுவார்
4 . சேர்த்து வைக்காதே
திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே
குறைவின்றி காத்திடுவார்
5 . தன்னலம் நோக்காமல்
பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை
என்றுமே இருக்கட்டும்