Back

112 . Ennai nirappum | என்னை நிரப்பும்

E – min / 2 / 4 | T – 125 

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே 

இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் ‘ 

1 . பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் 

பெலனே வாருமே

பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும் 

வல்லமையே வாருமே

2 . தேற்றரவாளன் பரிசுத்த ஆவி 

தேற்றிட வாருமே 

ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும் 

ஆவியே வாருமே

3 . வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும் 

வள்ளலே வாருமே

கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும் 

கருணையே வாருமே

4 . கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும் 

சாந்தமே வாருமே

பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும் 

பரமனே வாருமே

We use cookies to give you the best experience. Cookie Policy