Back

114 . Pidhavae | பிதாவே

E – Maj / 4 / 4 | T – 105 

பிதாவே ஆராதிக்கின்றோம் 

இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் 

ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம் 

ஆர்ப்பரிக்கின்றோம் 

அன்பு செய்கின்றோம் 

1 . மகனாக ( மகளாக ) தெரிந்து கொண்டீர்

மறுபடி பிறக்க வைத்தீர் 

ராஜாக்களும் நாங்களே 

ஆசாரியர்களும் நாங்களே

2 . சகலமும் படைத்தவரே 

சர்வ வல்லவரே

மகிமைக்குப் பாத்திரரே 

மங்காத பிரகாசமே 

3 . ஸ்தோத்திரமும் கனமும் 

வல்லமையும் பெலனும் 

மாட்சிமையும் துதியும் 

எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தரே 

பரலோக ராஜாவே 

எப்போதும் இருப்பவரே 

இனிமேலும் வருபவரே

5 . உமது செயல்களெல்லாம் 

அதிசயமானவைகள்

உமது வழிகளெல்லாம் 

சத்தியமானவைகள்

We use cookies to give you the best experience. Cookie Policy