D – Maj / 3 / 4 | T – 134
என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்
1 . அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
2 . என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத் தான் ஏங்குதையா
3 . துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்
4 . ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்
5 . உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா
6 . படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்