Back

116 . Ayya um thirunaamam | ஐயா உம் திருநாமம்

116 . ஐயா உம் திருநாமம்

B – Maj / 6 / 8 | T – 125 

ஐயா உம் திருநாமம் 

அகில மெல்லாம் பரவ வேண்டும் 

ஆறுதல் உம் வசனம் 

அனைவரும் கேட்க வேண்டும் 

1 . கலங்கிடும் மாந்தர் 

கல்வாரி அன்பை 

கண்டு மகிழ வேண்டும் 

கழுவப்பட்டு வாழ வேண்டும்

2 . இருளில் வாழும் மாந்தர் 

பேரொளியைக் கண்டு 

இரட்சிப்பு அடைய வேண்டும் 

இயேசு என்று சொல்ல வேண்டும்

3 . சாத்தானை வென்று 

சாபத்தினின்று 

விடுதலை பெற வேண்டும் 

வெற்றி பெற்று வாழ வேண்டும்

4 . குருடரெல்லாம் பார்க்கணும் 

முடவரெல்லாம் நடக்கணும் 

செவிடரெல்லாம் கேட்கணுமே சுவிசேஷம் சொல்லணுமே 

We use cookies to give you the best experience. Cookie Policy