Back

120 . yeshuvalae | இயேசுவாலே

120 . இயேசுவாலே

F – Maj / 6 / 8 / T – 115 

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – அவர் 

இரத்தத்தாலே கழுவப்பட்டவன் – நான் 

எனக்கென்று எதுவுமில்ல 

இப்பூமி சொந்தமில்ல 

எல்லாமே இயேசு . . . என் இயேசு 

எல்லாம் இயேசு இயேசு இயேசு 

1 . பரலோகம் தாய்வீடு .

அதைத் தேடி நீ ஓடு 

ஒருவரும் அழிந்து போகாமலே 

தாயகம் வர வேண்டும் தப்பாமலே – நம்ம 

2 . அந்தகார இருளினின்று 

ஆச்சரிய ஒளிக்கழைத்தார் 

அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட 

இந்த அடிமையை தெரிந்தெடுத்தார்

3 . இலாபமான அனைத்தையுமே 

நஷ்டமென்று கருதுகின்றேன் 

இயேசுவை அறிகின்ற தாகத்தினால் 

எல்லாமே இழந்து விட்டேன் – நான்

4. பாடுகள் அனுபவிப்பேன் 

பரலோக தேவனுக்காய் 

கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில் 

களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்

5 . பின்னானவை மறந்தேன் 

முன்னானவை நாடினேன் 

என் நேசர் தருகின்ற பரிசுக்காக 

இலக்கை நோக்கித் தொடருகின்றேன்

6 . நீதியை விரும்புகிறேன் 

அக்கிரமம் வெறுக்கிறேன் 

ஆனந்த தைல அபிஷேகத்தால் 

அனுதினம் நிரம்புகிறேன்

We use cookies to give you the best experience. Cookie Policy