Back

121. Parisutha aaviyae | பரிசுத்த ஆவியே

121 . பரிசுத்த ஆவியே

F – min 6/8 / T – 125 

பரிசுத்த ஆவியே 

பக்தர்கள் துணையாளரே 

கூட இருப்பவரே 

குறைகள் தீர்ப்பவரே 

1 . தேற்றிடும் தெய்வமே

திடன் தருபவரே 

ஊற்றுத் தண்ணீரே

உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் 

2. பயங்கள் நீக்கிவிட்டீர் 

பாவங்கள் போக்கிவிட்டீர் 

ஜெயமே உம் வரவால்

ஜெபமே உம் தயவால் – தினம் 

3. அபிஷேக , நாதரே 

ஆச்சாரமானவரே 

மீட்பின் நாளுக்கென்று

முத்திரையானவரே – எங்கள்   

4 விடுதலை தருபவரே 

விண்ணப்பம் செய்பவரே

சாட்சியால் நிறுத்துகிறீர் 

சத்தியம் போதிக்கிறீர் தினம் 

5. அயல்மொழி பேசுகிறோம் 

அதிசயம் காண்கிறோம்

வரங்கள் பெறுகிறோம் 

வளமாய் வாழ்கிறோம்

6 . சத்துரு வரும் போது 

எதிராய் கொடி பிடிப்பீர் 

எக்காளம் ஊதுகிறோம் 

எதிரியை வென்று விட்டோம் .

We use cookies to give you the best experience. Cookie Policy