122 . என் ஜனமே
F – min / 6 / 8 | T – 100
என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடிவா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்
1 . உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
2 . தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர
3 . உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா ? – மகனே