Back

123 . Appa pidhavae | அப்பா பிதாவே

123 . அப்பா பிதாவே

E – Maj / 4 / 4 / T – 90 

அப்பா பிதாவே அன்பான தேவா 

அருமை இரட்சகரே ஆவியானவரே

1 . எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் 

என் நேசர் தேடி வந்தீர் 

நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து 

நிழலாய் மாறி விட்டீர் 

நன்றி உமக்கு நன்றி – ஐயா

2 . தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் 

தயவாய் நினைவு கூர்ந்தீர் 

கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து 

கரம் பற்றி நடத்துகிறீர் – நன்றி 

3 . உளையான சேற்றில் வாழ்ந்த என்னை 

தூக்கி எடுத்தீரே

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி 

கழுவி அணைத்தீரே

4 . இரவும் பகலும் ஐயா கூட இருந்து 

எப்போதும் ( எந்நாளும் ) காப்பவரே 

மறவாத தெய்வம் மாறாத நேசர் 

மகிமைக்குப் பாத்திரரே 

5 . ஒன்றை நான் கேட்டேன் – அதையே 

நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன் 

உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 

உம்பணி செய்திடுவேன்

We use cookies to give you the best experience. Cookie Policy