124 . தேவாதி தேவன்
G – Maj | 2 / 4 | T – 120
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான் .
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்
1 . திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே
2 . எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்
3 . சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே
4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
அணைத்து மகிழ்பவரே