Back

125 . Nesikiraen | நேசிக்கிறேன்

125 . நேசிக்கிறேன்

F – min | 4 / 4 | T – 84 

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா 

நிலையில்லாத இந்த உலகத்திலே 

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா 

உம்மைத்தானே இயேசையா 

1 . ஒவ்வொரு நாளும் எனது கண் முன் 

உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் 

வலப்பக்கத்தில் இருப்பதனால் – என் 

அசைக்கப்படுவதில்லை – நான்

 2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம் 

உள்ளத்தில் இல்லையே

நிம்மதியே நிரந்தரமே 

நினைவெல்லாம் ஆள்பவரே – என் 

3 . ஐயா உம் தாகம் எனது ஏக்கம் 

அடிமை நான் கதறுகிறேன் 

என் ஜனங்கள் அறியணுமே 

இரட்சகர் உம்மைத் தேடணுமே 

4. உமது வேதம் எனது மகிழ்ச்சி 

ஓய்வின்றி தியானிக்கின்றேன்  

ஆற்றங்கரை மரமாக 

அயராமல் கனி கொடுப்பேன்

We use cookies to give you the best experience. Cookie Policy