Back

126 . Yen Yesuvae | என் இயேசு 

126 . என் இயேசு 

c – Maj / 4 / 4 / T – 100 

என் இயேசு உன்னைத் தேடுகிறார்

இடமுண்டோ மகனே ( மகளே ) உன் உள்ளத்தில் 

1 . கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் – உன் 

கண்ணீரைத் துடைக்க வருகின்றார்

உதவிடும் கரத்தை நீட்டுகிறார் – உன் 

உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் 

2 . சிலுவை மரணம் உனக்காக 

சிந்திய திரு இரத்தம் உனக்காக 

உன் பாவம் சுமந்து தீர்த்தாரே – தன்  

உயிர் தந்து உன்னை மீட்டாரே 

3 . மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள் 

மரித்த லாசரை மீண்டும் கண்டாள் . 

கலங்கிடும் மனிதா வருவாயா – என் 

கர்த்தரின் பாதம் விழுவாயா  

4 . சகேயு உடனே இறங்கி வந்தான் 

சந்தோஷமாக வரவேற்றான் 

பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான் 

பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்

5 . பேதுரு படகில் இடம் கொடுத்தான் 

பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான் 

அதிசய தேவனைக் கண்டு கொண்டான் – என் 

ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்

We use cookies to give you the best experience. Cookie Policy