127 . இரத்தம் ஜெயம்
D – Maj / 2 / 4 | T – 120
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் ‘
1 . எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்
2 . பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் – நமக்கு
3 . விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்
4 . நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம்
5 . பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம்