Back

129 . Nandri … endru | நன்றி . . . என்று

129 . நன்றி . . . என்று

E – min / 6 / 8 | T – 105 

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் 

நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் 

நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா 

1 . தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர் 

தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் 

அதிசயங்கள் ஆயிரம் 

அன்பரே உம் கரங்களிலே – நன்றி

2 . பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர் 

பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர் 

தீமையான அனைத்தையும் 

நன்மையாக மாற்றுகிறீர்  

3 . உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர் 

உண்மையான நண்பர்களை தருகின்றீர் 

நன்மையான ஈவுகள் 

நாள்தோறும் தருபவரே  

4 . கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர் 

கருவியாகப் பயன்படுத்தி வருகின்றீர் 

கண்மணிபோல் காப்பவரே 

கைவிடாமல் மேய்ப்பவரே

We use cookies to give you the best experience. Cookie Policy