133 . நானே வழி
F – Maj / 4 / 4 | T – 96
நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே ( மகளே ) – உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை
1 . நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகன் ( மகளே )
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
2 . உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே ( மகளே ) வருவாயா
இதயத்திலே இடம் தருவாயா
3 . உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழத் துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே ( மகளே )
இதயத்திலே இடம் வருவாய்
4 . நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒரு போதும் கைவிட மாட்டேன்
கலங்காதே என் மகனே ( மகளே )
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
( பின்வருமாறும் பாடலாம் )
நீரே வழி நீரே சத்தியம்
நீரே ஜீவன் இயேசையா
உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை
1 . நான் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர் ஒரு போதும் கைவிட மாட்டீர் – நீரே –
2 . எனக்காகவே ஜீவிக்கின்றீர்
என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர் – நீரே