Back

134 . Yeshu raja | இயேசு ராஜா

134 . இயேசு ராஜா

G – Maj / 2 / 4 | T – 130 

இயேசு ராஜா வந்திருக்கிறார் 

எல்லோரும் கொண்டாடுவோம் 

கைதட்டி நாம் பாடுவோம்

கொண்டாடுவோம் கொண்டாடுவோம் 

கவலைகள் மறந்து நாம் பாடுவோம் 

1 . கூப்பிடு நீ பதில் கொடுப்பார்

குறைகளெல்லாம் நிறைவாக்குவார் 

உண்மையாக தேடுவோரின் 

உள்ளத்தில் வந்திடுவார் – கொண்டாடுவோம் 

2 . மனதுருக்கம் உடையவரே 

மன்னிப்பதில் வள்ளலவர்  

உன் நினைவாய் இருக்கின்றார் 

ஓடிவா என் மகனே ( மகளே ) 

3 . கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் 

கரம் பிடித்து நடத்திடுவார் 

எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் 

இன்றே நிறைவேற்றுவார் 

4 , நோய்களெல்லாம் நீக்கிடுவார் 

நொடிப்பொழுதே சுகம் தருவார் 

பேய்களெல்லாம் நடுநடுங்கும் ( நம்ம ) 

பெரியவர் திரு முன்னே – இந்த 

5 . பாவமெல்லாம் போக்கிடுவார் 

பயங்களெல்லாம் நீக்கிடுவார் 

ஆவியினால் நிரப்பிடுவார் 

அதிசயம் செய்திடுவார்

We use cookies to give you the best experience. Cookie Policy