138 . எஜமானனே
C – min | 4 / 4 | T – 80
எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ( என் ) ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வது தானே – என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
1 . உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத் தான் நேசிக்கிறேன் – ஐயா
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா
2 . உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான்
அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
அதை நான் மறப்பேனோ
3 . அப்பா உன் சந்நிதியில் தான்
அகமகிழ்ந்து களிகூருவேன் – என்
எப்போது உம்மைக் காண்பேன் – நான்
ஏங்குதய்யா என் இதயம்
4 . என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் – தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்