140 . கால் மிதிக்கும்
F – Maj / 4 / 4 | T – 108
கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண் பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்
1 . பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா
2 . எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று
3 . செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை
4 . திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள்