Back

142 . Yesu Raja Um | இயேசு ராஜா உம்

142 . இயேசு ராஜா உம்

F – Maj / 6 / 8 / T – 115 

இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை 

அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும் 

உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற 

கிருபையைத் தாரும் 

ஒரு வாழ்வு அது உமக்காக – ( 2 ) 

உணர்வெல்லாம் உமக்காக 

உள்ளமெல்லாம் உமக்காக 

1 . உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும் 

உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும் 

2 . அழிந்து போகும் ஆத்துமாக்கள் நினைத்திட வேண்டும் 

ஆத்தும் பாரத்தினால் அலைந்திட வேண்டும் 

3 . உலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும் 

உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும் 

4 . அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட வேண்டும் 

அனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும்

We use cookies to give you the best experience. Cookie Policy