143 . தாகமுள்ளவன்
F – Min / 6 / 8 / T – 112
தாகமுள்ளவன் மேல்
தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில்
ஆறுகளை ஊற்றுவேன் என்றீர்
ஊற்றும் ஐயா உம் வல்லமையை
தாகத்தோடு காத்திருக்கிறேன் – நான்
1 . மாம்சமான யாவர் மேலும்
ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு
உரைக்க வேண்டுமே
2 . முதியோர் மேலும் இளைஞர் மேலும்
ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள்
காண வேண்டுமே
3 . நீரோடை அருகிலுள்ள
மரங்களைப் போல
நித்தமும் தவறாமல்
கனி தர வேண்டும்
4 . கல்லான இதயத்தை
எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப்
பொருத்திட வேண்டும்
5 . வனாந்தரம் செழிப்பான
தோட்டமாகணும்
வயல்வெளி
அடர்ந்த காடாகணும்
6 . நீதியும் நேர்மையும்
தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும்
வளர வேண்டுமே