Back

146 . Nam Yeshu nallavar | நம் இயேசு நல்லவர்

146 . நம் இயேசு நல்லவர்

F – min | 2 / 4 / T – 120 

நம் இயேசு நல்லவர் 

ஒரு போதும் கைவிடார் 

ஒரு நாளும் விலகிடார் 

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் 

சாத்தானை மிதிப்போம் 

தேசத்தை சுதந்தரிப்போம் 

1 . அதிசயமானவர் 

ஆறுதல் தருகிறார் 

சர்வ வல்லவர்  

சமாதானம் தருகிறார் – உனக்கு

2 . கண்ணீரைக் காண்கிறார் 

கதறலைக் கேட்கிறார் 

வேதனை அறிகிறார்  

விடுதலை தருகிறார் – இன்று 

3 . எதிர்காலம் நமக்குண்டு 

எதற்கும் பயமில்லை 

அதிகாரம் கையிலே 

ஆளுவோம் தேசத்தை – நாம்

4 . நொறுங்குண்ட நெஞ்சமே  

நோக்கிடு இயேசுவை 

கூப்பிடு உண்மையாய் – இன்று 

குறையெல்லாம் நீக்குவார் – உன் 

5 . நண்பனே கலங்காதே 

நம்பிக்கை இழக்காதே 

கண்ணீரைத் துடைப்பவர் 

கதவண்டை நிற்கிறார்  

6 . எத்தனை இழப்புகள் 

ஏமாற்றம் தோல்விகள் 

கர்த்தரோ மாற்றுவார் 

கரம் நீட்டித் தேற்றுவார் 

7 . என் இயேசு வருகிறார்  

மேகங்கள் நடுவிலே 

மகிமையில் சேர்த்திட 

மறுரூபமாக்குவார்

We use cookies to give you the best experience. Cookie Policy