152 , எனது மணவாளனே
C – Maj / 3 / 4 | T – 136
எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன் – நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்
1 . உம் நாமம் சொல்லச் சொல்ல – என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா – என்
2 . உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே
உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே – நான்
3 . என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
என் இதய எண்ணமெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக உமக்கு
4 . அழகெல்லாம் அற்றுப் போகும் – உலக
எழிலெல்லாம் ஏமாற்றும்
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா
5 . நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
நான் நடக்கும் பாதையெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக