Back

153 . Yakobae Nee | யாக்கோபே நீ

153 . யாக்கோபே நீ

A – Maj | 6 / 8 | T – 135 

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2 

பூத்துக் குலுங்கிடுவாய் 

காய்த்துக் கனி தருவாய் 

பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த

என் மகனே ( மகளே ) நீ வேரூன்றுவாய் 

1 . நானே காப்பாற்றுவேன் 

நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன் 

இரவும் பகலும் காத்துக் கொள்வேன் – உன்னை 

எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்

2 . அருமையான மகன் ( மகள் ) அல்லவோ ( எனக்கு ) 

பிரியமான பிள்ளையல்லவோ – நீ 

உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன் 

உனக்காக என் இதயம் ஏங்குகின்றது

3 . நுகங்களை முறித்துவிட்டேன் 

கட்டுகளை அறுத்துவிட்டேன் 

இனிமேல் நீ அடிமை ஆவதில்லை 

எனக்கே ஊழியம் செய்திடுவாய்

4 . புதிய கூர்மையான 

போரடிக்கும் கருவியாக்குவேன் – உன்னை 

மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய் 

குன்றுகளைத் தவிடு பொடியாக்குவாய்

We use cookies to give you the best experience. Cookie Policy