Back

155 . sarva vallavar | சர்வ வல்லவர்

155 , சர்வ வல்லவர்

F – Maj / 6 / 8 & 24 | T – 126 

சர்வ வல்லவர் என் சொந்தமானார் ( எஜமானன் ) . 

சாவை வென்றவர் என் ஜீவனானார் ( மணவாளன் )

ஆ . . . . இது அதிசயம் தானே 

ஓ . . . . . இது உண்மை தானே 

1 . கண்டு கொண்டேன் ஒரு புதையல்

பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம் 

இயேசுதான் என் இரட்சகர் 

இயேசுதான் என் ராஜா 

2 . சந்தோஷமும் சமாதானமும்

என் உள்ளத்தில் பொங்குதம்மா 

பாவமெல்லாம் போக்கிவிட்டார் 

பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் 

3 . பரலோகத்தில் எனது பெயர்

எழுதிவிட்டார் என் இயேசு 

என் வாழ்வின் நோக்கமெல்லாம் 

இயேசுவுக்காய் வாழ்வது தான் 

4 . ஊரெல்லாம் சொல்லிடுவேன்

உலகமெங்கும் பறைசாற்றுவேன் – நான் 

ஜீவிக்கிறார் என் இயேசு 

சீக்கிரமாய் வந்திடுவார்

We use cookies to give you the best experience. Cookie Policy