156 . கடந்து வந்த
F – min / 3 / 4 | T – 106
கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி , ராஜா உமக்கு நன்றி
1 . அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா
2 . எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
3 . பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே
4 . ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
5 . எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்கப் பயன்படுத்துகிறீர்