D – min / 3 / 4 | T – 135
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே
1 . பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ
உன் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் – எங்கு போகிறீர்
2 .தீய சிந்தனை நான் நினைத்ததால்
உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்
3 . பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உன்
விலாவில் குத்தினேனே
4 . அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
5 , கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
காரித் துப்பியது என் பகைமை உணர்ச்சியால்