Back

160 . Unatha Thevanae | உன்னத தேவனே 

160 . உன்னத தேவனே 

E – Maj / 4 / 4 | T – 100

உன்னத தேவனே என் இயேசு ராஜனே 

உம்மோடு இணைந்திட 

என் உள்ளம் ஏங்குதையா 

1 . மறுரூபமாக்கிடும் 

மகிமையின் மேகமே 

உம் முகச் சாயலாய் 

உருமாற்றும் தெய்வமே 

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம் 

உமக்காகத் துடிக்குதையா 

நினைவெல்லாம் பேச்செல்லாம் 

நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா 

2 . பேரின்பக் கடலிலே 

ஓய்வின்றி மூழ்கணும் 

துதித்து மகிழணும் 

தூயோனாய் வாழணும் – நான் 

3 . கொடியாகப் படரணும் 

உந்தன் நேசமே 

மடிமீது தவழணும் 

மழலைக் குழந்தை நான் – உன் 2 

4 . உம் அன்பைப் பருகிட 

ஓடோடி வந்துள்ளேன் 

உம்மாக மாறிட 

உலகை மறக்கின்றேன் 

5 . ஐயா உம் நிழலிலே 

ஆனந்த பரவசம் 

அளவிடா பேரின்பம் 

ஆரோக்கியம் அதிசயம்

We use cookies to give you the best experience. Cookie Policy