161 . உம் பீடத்தை
D – Mai / 3 / 4 | T – 140
உம் பீடத்தை சுற்றிச் சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே , இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா . . . . .
1 . உரத்த குரலில் நன்றிப் பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
2 . உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
3 . கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம் , உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்