Back

162 . kavarchi Nayaganae | கவர்ச்சி நாயகனே

162 . கவர்ச்சி நாயகனே 

F – Maj / 4 / 4 | T – 105 ) 

கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே 

கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே 

உமக்கே ஸ்தோத்திரம் – 2 

உயிருள்ள நாளெல்லாம் 

உமக்கே ஸ்தோத்திரம் 

1 . என்னை இழுத்துக் கொள்ளும் 

ஓடி வந்திடுவேன் 

அறைக்குள் அழைத்துச் செல்லும் 

அன்பில் களிகூருவேன் 

2 . திராட்சை இரசம் பார்க்கிலும் 

இனிமையானவரே 

ஊற்றுண்ட பரிமளமே 

உலகெல்லாம் உம் மணமே 

3 . இடக்கையால் தாங்குகிறீர் 

வலக்கையால் தழுவுகிறீர் 

எனக்கு உரியவரே 

இதயம் ஆள்பவரே 

4 . உம் மீது கொண்ட நேசம் 

அக்கினி ஜுவாலையன்றோ 

தண்ணீரும் வெள்ளங்களும் 

தணிக்க முடியாதையா 

5 , என் நாவில் உள்ளதெல்லாம் 

உந்தன் புகழ் தானே 

நான் பேசி மகிழ்வதெல்லாம் 

உந்தன் பெருமை தானே 

6 . வாரும் என் நேசரே 

வயல் வெளியில் தங்கிடுவோம் 

நேசத்தின் உச்சிதங்களை 

நிறைவாய் பொழிவேன் ஐயா

We use cookies to give you the best experience. Cookie Policy