Back

168 . Ummai ninaikum | உம்மை நினைக்கும் 

168 . உம்மை நினைக்கும் 

E – Maj / 4 / 4 | T – 100 

உம்மை நினைக்கும் போதெல்லாம் 

நெஞ்சம் மகிழுதையா 

நன்றி பெருகுதையா . . . 

1 . தள்ளப்பட்ட கல் நான் 

எடுத்து நிறுத்தினீரே 

உண்மை உள்ளவன் என்று கருதி 

ஊழியம் தந்தீரையா . . 

நன்றி நன்றி ராஜா 

நன்றி இயேசு ராஜா 

2 . பாலை நிலத்தில் கிடந்தேன் 

தேடி கண்டு பிடித்தீர்

கண்ணின் மணிபோல காத்து வந்தீர் 

கழுகு போல் சுமக்கின்றீர் . . 

3 . இரவும் பகலும் கூட 

இருந்து நடத்துகின்றீர் 

கலங்கும் நேரமெல்லாம் 

கரம் நீட்டி – ( என் ) கண்ணீர் துடைக்கின்றீர் – –

 4 . பேரன்பினாலே என்னை 

இழுத்துக் கொண்டீர் 

பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் – ( உம் ) 

பிள்ளையாய் தெரிந்து கொண்டீர் 

5 . உந்தன் துதியைச் சொல்ல 

என்னைத் தெரிந்து கொண்டீர்  

உதடுகளைத் தினம் திறந்தருளும் 

புது ராகம் தந்தருளும் 

6 . சிநேகம் பெற்றேன் ஐயா 

கனம் பெற்றேன் ஐயா 

உந்தன் பார்வைக்கு அருமையானேன் 

உம் ஸ்தானாதிபதியானேன்

7 . உலக மகிமையெல்லாம் 

உமக்கு ஈடாகுமோ 

வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும் 

உம் வார்த்தையோ ஒழியாதையா

We use cookies to give you the best experience. Cookie Policy