169. இடுக்கமான வாசல்
E – Maj 4 / 4 | T – 105
இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்
1 , வாழ்வுக்கு செல்லும் வாசல்
இடுக்கமானது . . .
பரலோகம் செல்லும் பாதை
குறுகலானது . . . – சிலுவை
2 . நாம் காணும் இந்த உலகம்
ஒருநாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம்
3 . இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு