Back

17 . Maritha Yesu | மரித்த இயேசு

E – Maj / 6 / 8 / T – 125

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா 

மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா 

அல்லேலூயா ஜீவிக்கிறார்

அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2 

1 . மரணம் அவரைத் தடுத்து நிறுத்த 

முடியவில்லையே 

கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே 

யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே 

சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு

2 . கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம் 

கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார் 

கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்

கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம் 

3 . எம்மாவூ சீடரோடு நடந்து சென்றார் 

இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார் 

அப்பம் பிட்டு கண்களையே திறந்து வைத்தார் 

அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்

4 . அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே 

இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர் 

5 . நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம் 

மோடி நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம் 

We use cookies to give you the best experience. Cookie Policy