176 . உங்கள் துக்கம்
E – min | 2 / 4 | T – 124
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே , கலங்காதே மகளே
1 . கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்து விடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய் . .
கலங்கிடவே வேண்டாம்
என் இயேசு கைவிடமாட்டார்
2 . நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் –
கண்ணீர் துடைக்கின்றார் – ( உன் )
3 . திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒரு நாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார் – ( நீ )
4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நம்
5 . அக்கினியின் மேல் நடந்தாலும்
எரிந்து போகமாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கிப் போக மாட்டாய்