Back

177 . Aalukai Cheiyumm | ஆளுகை செய்யும் 

177 . ஆளுகை செய்யும் 

C – min 3 / 4 / Worship Song 

ஆளுகை செய்யும் ஆவியானவரே 

பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே 

ஆவியானவரே என் 

ஆற்றலானவரே 

1 . நினைவெல்லாம் உமதாகணும் 

பேச்செல்லாம் உமதாகணும் – என் 

நாள் முழுதும் வழிநடத்தும் 

உம் விருப்பம் செயல்படுத்தும் 

2 . அதிசயம் செய்பவரே 

ஆறுதல் நாயகனே 

காயம் கட்டும் கர்த்தாவே 

கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என்  

3 . புதிதாக்கும் பரிசுத்தரே 

புதுப்படைப்பாய் மாற்றுமையா 

உடைத்துவிடும் உருமாற்றும் – என்னை 

பண்படுத்தும் பயன்படுத்தும் 

4 . அப்பாவை அறிந்திடணும் 

வெளிப்பாடு தாருமையா 

மனக்கண்கள் ஒளி பெறணும் 

மகிமையின் அச்சாரமே 

5 . என் இதய பலகையிலே 

எழுதிடும் உம் வார்த்தை 

மையாலல்ல உம் கையாலே 

எழுதிடுமே ஏங்குகின்றேன் 

6 . அரண்களை தகர்த்தெறியும் – என் 

அன்பின் வல்லவரே 

எதிரான எண்ணங்களை 

கீழ்ப்படுத்தும் சிறைப்படுத்தும்

We use cookies to give you the best experience. Cookie Policy