Back

178 . Geeva thaneerae | ஜீவத் தண்ணீரே

178 . ஜீவத் தண்ணீரே 

D – Maj / 6 / 8 / T – 125 

ஜீவத் தண்ணீரே ஆவியானவரே 

வற்றாத நதியாக வாரும் போதகரே 

வாரும் ஐயா போதகரே – 2 

வற்றாத ஜீவ நதியாக – 2 

1 . கணுக்கால் அளவு போதாதையா 

முழங்கால் ( இடுப்பு ) அளவும் போதாதையா 

நீந்தி நீந்தி மூழ்கணுமே – 2 

மிதந்து மிதந்து மகிழணுமே – நான் 

2 .போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே 

பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே 

சேரும் இடமெல்லாம் ஆறுதலே 

செல்லும் இடமெல்லாம் செழிப்புத்தானே 

3 , கோடி கோடி மீனவர் கூட்டம் 

ஓடி ஓடி வலை வீசணும் 

பாடிப் பாடி மீன் பிடிக்கணும் 

பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் 

4 , கரையோர மரங்கள் ஏராளமாய் 

கனி தரவேண்டும் தாராளமாய் 

இலைகள் எல்லாம் மருந்தாகணும் 

கனிகள் எல்லாம் உணவாகணும்

We use cookies to give you the best experience. Cookie Policy