E – Maj / 3 / 4 / T – 155
பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்
1 . கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
நிற்கக் கூடியவன் யார் ?
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதனே
2 . நாமெல்லாம் பரிசுத்தராவதே
தெய்வத்தின் திருச்சித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது
3 . பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை
ஏந்தி எந்நாளும் பாடுவேன் – 2