180 . நன்றி என்று
F – Maj / 6 / 8 | T – 126
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா – உமக்கு
நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா
1 . கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளைத் தந்தீரே நன்றி ராஜா
2 . அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா
3 . ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
4 . சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
5 . தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா
6 . வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா
7 . புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா
8 . ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா