184 . ஆவியான எங்கள்
E – Maj / 6 / 8 & 2 / 4 / T – 122
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும் . . . . .
1 . ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா – ஆட்கொண்டு
2 . சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர் பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா
3 . பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா
4 . மனதைப் புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு
5 . தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா
6 . பாவம் , நீதி , நியாயத்தீர்ப்பை
கண்டித்து உணர்த்தும் ஐயா
பரிபூரண உம் சத்தியத்திற்குள்
பக்தர்களை நடத்தும் ஐயா