Back

185 . Thukaamal | தூங்காமல் 

185 . தூங்காமல் 

 E – min / 6 / 8 | T – 105 

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா 

விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா – ( 2 ) 

தூங்கினால் எதிரி களை விதைப்பான் 

ஜெபம் ( ஜெபிக்க ) மறந்தால் – 

எதிரி ஜெயம் எடுப்பான் – நான் ( நீ ) 

1 . உடலை ஒடுக்கணும் உணவைக் குறைக்கணும் 

பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் 

2 . அன்னாளைப் போல கண்ணீரை வடிக்கணும் 

சாமுவேலைக் ( எழுப்புதல் ) காணும் வரை 

இதயத்தை ஊற்றணும் 

3 . தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும் 

சிங்கங்களின் வாய்களைத் தினம் தினம் கட்டணும்

4 . பவுலைப் போல சிறையிலே ஜெபிக்கணும் 

கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் 

5 . மோசேயைப் போல மலை மேல் ஏறணும் 

கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய் 

We use cookies to give you the best experience. Cookie Policy