Back

189 . Karthavae ummai | கர்த்தாவே உம்மை 

189 . கர்த்தாவே உம்மை 

F – Maj / 4 / 4 | T – 90 

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் 

கை தூக்கி எடுத்தீரே 

உம்மைக் கூப்பிட்டேன் 

என்னைக் குணமாக்கினீர் 

1 . எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் 

உமது அன்பு என்னைத் தாங்குதையா 

கவலைகள் பெருகும் போது 

உம் கரங்கள் அணைக்குதையா – என் 

2 . உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர் 

உம்மைவிட்டுப் பிரிந்து மிகவும் கலங்கிப் போனேன் 

சாக்கு ஆடை நீக்கி , என்னை 

சந்தோஷத்தால் மூடினீர்

3 . உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் 

உம்மாலே ஒரு மதிலைத் தாண்டிடுவேன் 

பெலத்தால் இடைக் கட்டினீர் 

மான் கால்கள் போலாக்கினீர் 

4 . உந்தன் ( உம்திரு ) பாதத்தில் 

மகிழ்ந்து கொண்டாடுவேன் 

உம் திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன் 

கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே

We use cookies to give you the best experience. Cookie Policy