193 . தாய்மடியில்
C – min / 3 / 4 / T – 140
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்த்துவிட்டேன் நான்
1 . கவலையில்லையே கலக்கம் இல்லையே
கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் – நான்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர் தினம்
2 . செய்த நன்மைகள் நினைக்கின்றேன்
நன்றியோடு துதிக்கின்றேன் – நான்
கைவிடாத என் ஆயனே – என்னை
கல்வாரி நாயகனே – என்
3 . துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே – என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா – என்
4 . உம்மைத் தானே பற்றிக் கொண்டேன்
உம் தோளில் அமர்ந்துவிட்டேன் – நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த
5 . அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன் – நான்
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்வேனையா – நான்