194 . தளர்ந்து போன
C – min / 6 / 8 / T – 138
தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்
1 . உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்
அஞ்சாதிருங்கள்
அநீதிக்குப் பழி வாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் .
அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்
2 . அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூய வழி
தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்
கடந்து செல்வதில்லை மீட்கப்பட்டோர் அதன் வழியாய்
நடந்து செல்வார்கள்
3 . ஆண்டவரால் மீட்கப்பட்டோர்
மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்
4 . பார்வையற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள் போல
துள்ளிக் குதிப்பார்கள்
ஊமையர்கள் பாடிப் பாடி மகிழ்ந்திருப்பார்கள்