Back

195 . Andavar padaitha | ஆண்டவர் படைத்த 

195 . ஆண்டவர் படைத்த 

D – Maj / 2 / 4 / T – 125 

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது 

இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் 

அல்லேலூயா பாடுவோம் 

அல்லேலூயா தோல்வி இல்லை 

அல்லேலூயா வெற்றி உண்டு 

1 . எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் 

என் பக்கம் இருக்கிறார் 

உலக மனிதர்கள் எனக்கு எதிராக 

என்ன செய்ய முடியும் 

தோல்வி இல்லை எனக்கு 

வெற்றி வெளி செல்வேன் 

தோல்வி இல்லை நமக்கு 

வெற்றி பவனி செல்வோம் 

2 . எனது ஆற்றலும் எனது பாடலும் 

எனது மீட்புமானார் 

நீதிமான்களின் கூடாரத்தில் ( சபைகளிலே ) 

வெற்றிக் குரல் ஒலிக்கட்டும் 

3 . தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் 

மூலைக்கல் ஆயிற்று 

கர்த்தர் செயல் இது அதிசயம் இது 

கைத்தட்டிப் பாடுங்களேன் 

4 . என்றும் உள்ளது உமது பேரன்பு 

என்று பறைசாற்றுவேன்

துன்ப வேளையில் நோக்கிக் கூப்பிட்டேன் 

துணையாய் வந்தீரையா

We use cookies to give you the best experience. Cookie Policy